சோளிங்கர் தக்கான்குளத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தெப்பல் உற்சவம் தொடங்கியது


சோளிங்கர் தக்கான்குளத்தில்  லட்சுமி நரசிம்மர் கோவிலில் தெப்பல் உற்சவம் தொடங்கியது
x
தினத்தந்தி 18 Feb 2022 3:12 AM IST (Updated: 18 Feb 2022 3:12 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் தக்கான்குளத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தெப்பல் உற்சவம் தொடங்கியது.

சோளிங்கர்

சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதாகும். இந்த கோவிலில் மாசி மகத்தன்று 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறும். அதன்படி முதல் நாளான நேற்று விடியற்காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

 இதைத்தொடர்ந்து மாலை பக்தோசித பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மரக் கேடயத்தில் எழுந்தருளி ஊர் கோவிலில் இருந்து புறப்பட்டு பிரம்மதீர்த்த என்கிற தக்கான் குளத்தை அடைந்தது.

அங்கு மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் பிரம்ம தீர்த்தக் குளத்தில் மூன்று முறை தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஐந்து சுற்றுகள் ஆகும் திங்கட்கிழமை 7 சுற்றுகள் ெதப்பல் திருவிழா நடைபெறுகிறது.

எனினும் முதல் நாளான நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தெப்பல் திருவிழாவுக்கு பக்தர்கள் அதிகம் வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டாம் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். 

Next Story