கள்ளச்சந்தையில் விற்க மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது


கள்ளச்சந்தையில் விற்க மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது
x
தினத்தந்தி 18 Feb 2022 12:29 PM IST (Updated: 18 Feb 2022 4:06 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 567 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருச்சி,

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அந்த வகையில் திருச்சியில் மதுபான விநியோம் மற்றும் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாட செய்பவர்களுக்கு எதிராக மாவட்ட நிர்வாக தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பெண் ஒருவர் மதுபானத்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இபி ரோடு பகுதியை சேர்ந்த கோமதி (வயது35) என்ற பெண்ணின் வீட்டில் இருந்த  567 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story