சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2022 4:43 PM IST (Updated: 18 Feb 2022 4:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.41 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 928 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது திருவள்ளூரைச் சேர்ந்த பாலாஜி நீலகண்டன் (வயது 31) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.41 லட்சத்து 77 ஆயிரம் மதிப்புள்ள 928 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாலாஜியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story