தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்


தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 18 Feb 2022 5:32 PM IST (Updated: 18 Feb 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

உடுமலை நகராட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகளில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 12வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
நகராட்சி தேர்தல்
உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த 33வார்டுகளில் 64வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மீதி உள்ள 32 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று  நடக்கிறது. 
14வது வார்டில் தேர்தல் இல்லாததால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 63ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மின் வசதி, விளக்கு வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் முன்பகுதியில் சாமியானா பந்தல்கள் நேற்று  போடப்பட்டன
பதற்றமான வாக்குச்சாவடிகள்
உடுமலை நகராட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 63வாக்குச்சாவடிக்குள்ளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10, 13, 15, 18, 22, 23, 24, 26, 27, 31, 32, 33ஆகிய12 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் அந்த பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு வெளிப்புறம் பார்த்தபடி கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி போலீஸ் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலரைக்கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட 12 வாக்குச்சாவடிகளின் வெளிப்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.


Next Story