மதுவில் விஷம் கலந்து குடித்த புரோட்டா மாஸ்டர் சாவு


மதுவில் விஷம் கலந்து குடித்த புரோட்டா மாஸ்டர் சாவு
x
தினத்தந்தி 18 Feb 2022 7:13 PM IST (Updated: 18 Feb 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த புரோட்டா மாஸ்டர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்

ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தியடைந்த புரோட்டா மாஸ்டர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புரோட்டா மாஸ்டர்
காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவில் வசித்து வந்தவர் பீர்முகைதீன் மகன் சம்சு கனி (வயது 40. இவருக்கு திருமணமாகி உசேன் பாத்திமா என்ற மனைவியும், இரண்டு மகன்களுகம் உள்ளனர்.
இவர் காயல் பட்டினத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடிக்க பணம் கேட்டு தகராறு
இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி இரவு வீட்டுக்கு மது போதையில் வந்த அவர், மீண்டும் குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே குடித்துவிட்டு வந்து இருக்கிறீர்கள், மீண்டும் குடிக்க நான் பணம் தர மாட்டேன் என மனைவி மறுத்துள்ளார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மகன்களுடன் உசைன்பாத்திமா வீட்டிற்குள் இருந்துள்ளார்.
மதுவில் விஷம்...
சிறிது நேரத்தில்  சம்சு கனி வீட்டின் உட்கார்ந்து இருந்த சம்சுகனி, தான் வைத்திருந்த மதுபாட்டிலில் எலி மருந்தை கலந்து குடித்து மயங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகன்களும் அவரை  காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து அவரது  மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story