திருவள்ளூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்கு


திருவள்ளூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Feb 2022 7:46 PM IST (Updated: 18 Feb 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் அனுமதியின்றி பேனர் வைத்த தி.மு.க., அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று திருவள்ளூர் புங்கத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு தி.மு.க.வின் திருவள்ளூர் நகர துணை செயலாளர் ஏகாம்பரம் என்பரது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அரசு அனுமதி இல்லாமல் ஏகாம்பரம் மற்றும் பவானி, நாகன், வள்ளி ஆகியோர் பேனர் வைத்திருந்தது கண்டனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கண்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேபோல் நேற்று முன்தினம் திருவள்ளூர் நகராட்சியில் 13-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயராணி வேல்முருகன் அரசு அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்திருந்ததை போலீசார் ரோந்து பணியின்போது கண்டனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்த அ.தி.மு.க. நகர்மன்ற வேட்பாளர் உதயராணி வேல்முருகன் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர் அ.தி.மு.க. சார்பில் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story