போடியில், வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


போடியில், வீட்டில் பதுக்கிய  ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Feb 2022 7:47 PM IST (Updated: 18 Feb 2022 7:47 PM IST)
t-max-icont-min-icon

போடியில், வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போடி:
போடி சின்னசவுடம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 600 பாக்கெட் புகையிலை பொருட்கள் 15 சாக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சுமார் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story