பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு


பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 8:29 PM IST (Updated: 18 Feb 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பதற்றமின்றி அமைதியாகவும், வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின் பெயரில் நடைப்பெற்றது. இந்த அணிவகுப்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தொடங்கி வைத்தார். 

இந்த அணிவகுப்பு ஆயில் மில், நகராட்சி அலுவலகம், பஸ் நிலையம், தேரடி வீதி, பஜார், குளக்கரை வீதி வழியாக காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story