5 மாத ஆண் குழந்தை உடல் மீட்பு


5 மாத ஆண் குழந்தை உடல் மீட்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 10:15 PM IST (Updated: 18 Feb 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

5 மாத ஆண் குழந்தை உடல் மீட்பு

ஊட்டி

குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு என 10-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள பிரசவ வார்டு கழிவுநீர் தொட்டியில் திடீரென அடைப்பு ஏற்பட்டது.

இதனை சரிசெய்வதற்காக பணியாளர்கள் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, கழிவுநீர் தொட்டியில் பிறந்து 5 மாதமே ஆன ஆண் குழந்தையின் உடல் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story