ஊட்டியில் 144 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஊட்டியில் 144 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஊட்டி
ஊட்டி நகராட்சி 10-வது வார்டு காந்தல் பகுதியில் கடந்த சில மாதங்களாக பூட்டி கிடந்த வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய இருப்பதாகவும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
இதில் சகாதேவன் (வயது 35) என்பவர் வீட்டில் மதுபான பாட்டில்கள் பெட்டி, பெட்டியாக சட்ட விரோதமாக வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக பறக்கும் படையினர் 144 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். வாக்காளர் களுக்கு வினியோகம் செய்ய மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டதா அல்லது வெளியே கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டு இருந்ததா என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story