வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 6 பேர் மீது வழக்கு
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொண்டி,
தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு ஓடாவி தெரு பள்ளிவாசல் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டு வாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப் படையில் தேர்தல், பறக்கும் படை அதிகாரி ஜஸ்டின் பெர்னாண்டோ, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (வயது45). என்பவரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500-ஐ கைப்பற்றி உள்ளனர். இதுதொடர்பாக போலீசில் அளித்த புகாரின் பேரில் சசிகுமார் மற்றும் 5 பேர் மீது தொண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story