ஓசூர் அருகே அனுமதியின்றி தனியார் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 263 டன் உர மூட்டைகள் பறிமுதல் மாவட்ட வருவாய் அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை
ஓசூர் அருகே அனுமதியின்றி தனியார் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 263 டன் உர மூட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கிடங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே அனுமதியின்றி தனியார் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 263.25 டன் உர மூட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கிடங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பக்கமுள்ள கொத்தூர் கிராமத்தில் அரசின் உரிய அனுமதியின்றி தனியார் கிடங்கு செயல்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், தனியார் கிடங்கில் திடீர் சோதனை செய்தனர்.
இந்த ஆய்வின்போது, தனியார் கிடங்கில் 263.25 டன் சந்தேகத்திற்குரிய வேம்பு முலாம் பூசப்பட்ட யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மூட்டைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிடங்கிற்கு ‘சீல்’
தொடர்ந்து அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின்படி, சட்ட விரோத உர பதுக்கல் காரணத்திற்காக தனியார் கிடங்கிற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) சுரேஷ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, உர கட்டுப்பாட்டு ஆய்வாளர் ரேணுகா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story