கோவை, பிப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை, பிப்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 18 Feb 2022 10:52 PM IST (Updated: 18 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

கோவை, பிப் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


கோவை, பிப்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த நிலையில் கோவையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகிக்கப் படுவதாக கூறி, கொலுசு உள்ளிட்ட பொருட்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில துணைத் தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில், மாநில பொருளாளர் அனுஷா ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதா னம் அடைந்த அவர்கள், கலெக்டர் சமீரனிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.
தேர்தலை நிறுத்த வேண்டும்
இது குறித்து மாநில துணை தலைவர் தங்கவேல் கூறியதாவது


கோவை மாவட்டத்தில் வார்டு வாரியாக வாக்காளர்களின் விவரங்க ளை சேகரித்து தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பணம் வினியோகிக்கிறது. 

அமைச்சர் ஒருவரின் புகைப்படத்துடன் வந்து வீடுகளில் கொலுசு மற்றும் ஹாட் பாக்ஸ்கள் வினியோகிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி நடக்கி றது. இதனால் கோவையில் நியாயமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



Next Story