82 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காாில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முத்துப்பேட்டை;
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே காாில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
82 கிலோ கஞ்சா
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் ஈ.சி.ஆர். சாலை ரவுண்டானா அருகே முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் காரில் 3 மூட்டைகளில் 82 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
கைது
இதைத்தொடர்ந்து காரில் வந்த சோழன்குடிகாடு பகுதியை சேர்ந்த ராஜா(வயது43), ஜாம்புவானோடையை சேர்ந்த வீரகணேஷ்(28), செந்தில் நாதன்(27), பிரபாகரன்(32), கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் (29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து 82 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்த முயன்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 லட்சம் என கூறப்படுகிறது. காரில் கடத்த முயன்ற 82 கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story