வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், டி.ஐ.ஜி. ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், டி.ஐ.ஜி. ஆய்வு செய்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் பதிவாகும் வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது தேர்தல் பார்வையாளர் பிரதாப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உள்ளூர் தேர்தல் பார்வையாளர் அஜய்சீனிவாசன், பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story