ஆரணி நகராட்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து பா.ஜ.க. வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி


ஆரணி நகராட்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து பா.ஜ.க. வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 18 Feb 2022 11:35 PM IST (Updated: 18 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி நகராட்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து பா.ஜ.க. வேட்பாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணி நகராட்சி அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து பா.ஜ.க. வேட்பாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி வளாகத்தில் நேற்று மதியம் 2.30 மணியளவில் 27-வது வார்டு பா.ஜ.க. வேட்பாளரான கே.ஆர்.சண்முகம் தனது வாக்குச்சாவடி பகுதி மக்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை, எனக்கும் இன்னும் வழங்கப்படவில்லை, வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் விவரம் குளறுபடியாக உள்ளது, தேர்தலை முறையாக நடத்த வேண்டும், வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது, அதை தடுக்க வேண்டும், வாக்குச்சாவடி மையத்தில் வெப் கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரான பி. தமிழ்ச்செல்வியிடம் நேற்று முன்தினமே புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் கே.ஆர். சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி வளாகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வெளியே நின்று நகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரான தமிழ்ச்செல்வியை கண்டித்து கோஷம் எழுப்பினார். அப்போ அருகில் நின்றிருந்த போலீசாரும், அதிகாரிகளும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

தீக்குளிக்க முயற்சி

உடனே அவர் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதற்குள் தகவல் அறிந்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓடி வந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினார். 

நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக பூத் சிலிப் வழங்க செய்யப்படும், என்றார். பூத் சிலிப் வழங்காத அங்கன்வாடி பணியாளர்களுக்கு நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட கலெக்டரின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதன் கீழே கலெக்டரின் போன் நம்பர் எழுதப்படாமல் இருந்தது. இதை, கண்டித்தும் ேவட்பாளர் கே.ஆர்.சண்முகம் பேசினார். உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் கலெக்டரின் பெயருக்கு கீழே கலெக்டரின் அலுவலக போன் நம்பர் எழுதப்பட்டது, இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story