வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாணியம்பாடியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாபர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியை அடுத்த மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி ஆம்பூர் அருகே பெரியவரிகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் சின்னவரிக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற யுவராஜ் (வயது 23) என்பவர் சிறுமியை ஒரு ஆண்டாக காதலித்து வந்தார்.
இந்தநிலையில் 14-ந்தேதி வேலைக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று யுவராஜ் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடைேய தனது மகளை காணவில்லை, எனப் பெற்றோர் வாணியம்பாடி கிராமிய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் ராேஜஷ் என்ற யுவராஜை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story