தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சிதிலமடைந்த கோபுரம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள நுழைவு கோபுரம் சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கோபுரத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த சிதிலமடைந்த கோபுரத்தின் மேல் பகுதியை மதுப்பிரியர்கள் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதிலமடைந்த கோபுரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கும்பகோணம்.
Related Tags :
Next Story