மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்
மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது
காரையூர்
காரையூர் அருகே உள்ள இடையாத்தூர் வழியாக மணல் கடத்தி வருவதாக காரையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் இடையாத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த சைகை காட்டினர். ஆனால், போலீசாரை பார்த்ததும் அதன் டிரைவர் சரக்கு வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். பின்னர், அந்த வாகனத்தில் போலீசார் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அந்த சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story