வாக்கு எந்திரங்கள் இருந்த அறை பூஜை செய்து திறக்கப்பட்டதா?
மதுரை மாநகராட்சியில் வாக்கு எந்திரங்கள் இருந்த அறை பூஜை செய்து திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மதுரை,
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் இன்று(சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைெயாட்டி நேற்று மதுரை மாநகராட்சி பில்லர் அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறை, அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்த பின்னர் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னரே வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story