பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.25 ஆயிரத்தை வீசிச்சென்ற கும்பல்


பறக்கும் படையினரை பார்த்ததும்  ரூ.25 ஆயிரத்தை வீசிச்சென்ற கும்பல்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:33 AM IST (Updated: 19 Feb 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.25 ஆயிரத்தை வீசிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு  பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பறக்கும் படை தனி தாசில்தார் வானதி மற்றும் போலீஸ் அதிகாரி முத்து கோபால் ஆகியோர் தலைமையில் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டி மேலத்தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நடுநிலைப்பள்ளி பின்புறம் சிலர் கூட்டமாக நின்றனர். இதையடுத்து அதிகாரிகள் வருவதை பார்த்த உடன் அவர்கள் கையில் இருந்த ரூ.25,500-யை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார், பணத்தை வீசி சென்ற நபர்கள் யார்? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு வரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story