விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2022 1:50 AM IST (Updated: 19 Feb 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஜீவானந்தம். இவரது தங்கை மாரீஸ்வரி (வயது 30). இவர் மனவளர்ச்சி குன்றியது போல் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரீஸ்வரிக்கும், பாண்டியன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் மாரீஸ்வரி தனது குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று தந்தை கருப்பசாமி, அண்ணன் ஜீவானந்தம் ஆகியோரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு தங்கை மனவளர்ச்சி குன்றியவர் போல் இருப்பதாலும், அவரது கணவர் குடிபழக்கம் உள்ளவராக இருப்பதாலும் மாரீஸ்வரியின் குழந்தைகளுக்கு குடும்ப சொத்தில் பங்கு கொடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாரீஸ்வரி சொத்தில் தனக்கு உடனே பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறி கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 13-ந்தேதி விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மாரீஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story