சிவகாசி மாநகராட்சி தேர்தல் பணியில் ஆயிரம் ஊழியர்கள்


சிவகாசி மாநகராட்சி தேர்தல் பணியில் ஆயிரம் ஊழியர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:53 AM IST (Updated: 19 Feb 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பணியில் ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பணியில் ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். 
மாநகராட்சி
சிவகாசி மாநகராட்சியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
தொடர்ந்து வாக்காளர்கள் வாக்களிக்க வரும் பட் சத்தில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 555 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆணைகள் நேற்று காலை வழங்கப்பட்டது. 
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த வாக்கு எந்திரங்கள் லாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகளை 5 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கள் கண்காணித்தனர். முன்னதாக வாக்குசாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களை ஒரு சாக்குப்பையில் போட்டு அனுப்பி வைக்க மாநகராட்சி ஊழியர்கள் ஆயத்தமாக இருந்தனர்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-  சிவகாசி மாநகராட்சியின் முதல் தேர்தல் நடத்த தேவையான அனைத்து பணிகளும் தயராக உள்ளது. 111 வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குபதிவுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதே போல் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட 5 பேர் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் பேர்
வாக்குசாவடியில் பணியாற்ற 555 பேர் தயார் நிலையில் உள்ளனர். வாக்கு சாவடியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள ஒரு துப்புரவு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 
குடிநீர் வசதி செய்து கொடுக்க ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குபதிவு விபரங்களை சேகரிக்க 80 பேர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டுஅறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தேர்தல் பணியில் ஆயிரம் ஊழியர்களை நியமித்து பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story