டெல்லியில் சொகுசு கார்களை திருடி; பெங்களூருவில் விற்ற வாலிபர் கைது
கார்களை திருடி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு: பெங்களூரு கொடிகேஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் டெல்லியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. இவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து டெல்லியில் விலை உயர்ந்த சொகுசு கார்களை திருடி வந்துள்ளார்.
அவ்வாறு திருடும் கார்களை, பெங்களூருவுக்கு கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. சொகுசு கார்களின் விலை குறைவாக இருந்ததால், அந்த வாலிபரிடம் இருந்து பல்வேறு நபர்கள் கார்களை வாங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் டெல்லி போலீசாரிடம் சிக்காமல் இருக்க, திருட்டு கார்களை பெங்களூருவுக்கு கொண்டு வந்து அந்த வாலிபர் விற்றதும் தெரியவந்தது.
கைதான வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் திருடிய 8 சொகுசு கார்கள் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான வாலிபர் மீது கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வாகன திருட்டில் தலைமறைவாக உள்ள வாலிபரின் கூட்டாளியை கொடிகேஹள்ளி போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story