வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர் கைது
கீழக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர் கைது செய்யப்பட்டார். ரூ.33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழக்கரை,
கீழக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர் கைது செய்யப்பட்டார். ரூ.33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின் றனர். கீழக்கரை பகுதியில் பறக்கும் படை அலுவலர் பரமசிவம் தலைமையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது 20-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பறக்கும் படை அலுவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் அங்கு நின்று கொண்டிருந்த ஜமாலுதீன் (வயது51) என்பவரை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது ரூ.33 ஆயிரத்து 600-ம் வாக்காளர்களுக்கு வினியோகிக்க தென்னை மரச் சின்னம் அச்சடித்த நோட்டீசும் இருந்தது.
கைது
இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் பணத்தையும், துண்டு பிரசுரங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கீழக்கரை போலீசில் புகார் செய்தார். கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர் அங்குச்சாமி வழக்குப்பதிவு செய்து ஜமாலுதீனை கைது செய்தார்.
Related Tags :
Next Story