ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உத்தரவு ஜெயின் கல்லூரி பெண் விரிவுரையாளர் ராஜினாமா


ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உத்தரவு ஜெயின் கல்லூரி பெண் விரிவுரையாளர் ராஜினாமா
x
தினத்தந்தி 19 Feb 2022 2:30 AM IST (Updated: 19 Feb 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உத்தரவு ஜெயின் கல்லூரி பெண் விரிவுரையாளர் ராஜினாமா

பெங்களூரு: துமகூரு மாவட்டத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரியில் விரிவுரையாளராக ஜாந்தினி என்பவர் பணியாற்றி வந்தார். அவரும், ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்து சென்றார். ஆனால் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து மாணவிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களும் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. 

இதன் காரணமாக ஜாந்தினி ஆத்திரமடைந்தார். தான் ஹிஜாப் அணிந்து தான் கல்லூரிக்கு வருவதாக நிர்வாகத்திடம் கூறியதாக தெரிகிறது. இதனை ஏற்க நிர்வாகம் மறுத்து விட்டது. இதையடுத்து, விரிவுரையாளரான ஜாந்தினி தனது பணியை ராஜினாமா செய்து கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என உத்தரவிடுவது சட்டத்திற்கு எதிரானது, இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் எனது பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன், என்று கூறியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் பெண் விரிவுரையாளர் ராஜினாமா செய்த விவகாரம் துமகூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story