திமுக அதிமுகவினர் இடையே மோதல்
வேலூரில் திமுக அதிமுகவினர் இடையே மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
வேலூரில் திமுக அதிமுகவினர் இடையே மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மோதல், தள்ளுமுள்ளு
வேலூர் மாநகராட்சியில் இன்று விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வேலப்பாடி பகுதியில் 45-வது வார்டு மரக்கடை கந்தசாமி முதலி தெருவில் உள்ள நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் பலர் மையத்துக்கு வந்து வாக்களித்து சென்றனர்.
வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினர் அருகருகே நின்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்குச்சாவடிக்கு மிக அருகில் கட்சி துண்டு அணிந்து வந்ததாகவும், வாக்குச்சாவடி அருகே வாக்கு கேட்டதாகவும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டை கூறினர்.
திடீரென அவர்களுக்கிடையே இடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் காரசாரமாக பேசிக் கொண்டனர். இதனால் வாக்குச்சாவடி அருகே பதற்றம் நிலவியது.
பரபரப்பு
அதைத்தொடர்ந்து வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமாக போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story