வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளித்த பெண் வாக்காளர்கள்
வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்காளித்த பெண் வாக்காளர்கள்
மடத்துக்குளம் பகுதி வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வமுடன் பெண் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு
மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 10155 ஆண்கள் 10409 பெண்கள் 3ம் பாலினத்தவர் 3 என மொத்தம் 20267 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டு கவுன்சிலர் பொறுப்புக்கு 73 வேட்பாளர் போட்டியிடுகின்றனர். சங்கராமநல்லூர் பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில் 4790 ஆண்கள் 4877 பெண்கள், ஒரு 3ம் பாலினத்தவர் ஆக மொத்தம் 9668 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கணியூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 2813 ஆண்கள் 3219 பெண் ஒரு 3ம் பாலித்தவர்ஆக மொத்தம் 6033 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 56 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குமரலிங்கம் பேரூராட்சியில்உ ள்ள 15 வார்டுகளில் 6260 ஆண்கள் 66 32 பெண்கள், ஒரு 3ம் பாலினத்தவர் என மொத்தம் 12893 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 58 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆர்வமுடன்
இந்த பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் மடத்துக்குளம் பகுதியில் அமைதியாக நடந்தது. நேற்று காலை முதலே பெண் வாக்காளர்கள் வரிசையில் நின்றுஆர்வமுடன் வாக்களித்தனர்.
மடத்துக்குளம் பேரூராட்சி கணேசபுரத்தில் காலை 10 மணிக்கு 90 வயதை கடந்த 92 வயது மூதாட்டி காளியம்மாள் வாக்கு செலுத்தினார். மிகவும் தள்ளாத வயதிலும், தடி ஊன்றி நடந்து வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
Related Tags :
Next Story