தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்


தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2022 6:57 PM IST (Updated: 19 Feb 2022 6:57 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து, பீடி, உணவு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்ய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே தொழிலாளர்கள் விடுமுறை தொடர்பான புகார்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா- 94428 32516, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் செந்தில் குமார்-95975 77599, ஆரியமுத்து - 86109 75299, வெங்கடேசன் - 88705 99105, உஷாராணி - 94447 68501. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story