ஒரே பெயரில் 2 பேர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு
ஒரே பெயரில் 2 பேர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு
திருப்பூர் மாநகராட்சி 46 வது வார்டு மணியக்காரன்பாளையத்தில் உள்ள காஞ்சிபுரம் எஸ்.எஸ்.ஏ. மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிக்கு சுந்தரமூர்த்தி என்பவர் ஆதார் ஆவணத்தை காண்பித்து காலை 11 மணி அளவில் வாக்களித்துள்ளார்.
பின்னர் அதே வாக்குச்சாவடிக்கு மதியம் 12 மணிக்கு ஆர்.வி.ஈ.நகர் முதல் தெருவை சேர்ந்த மற்றொரு சுந்தரமூர்த்தி என்பவர் தனது மனைவியுடன் வாக்களிக்க வந்தார். அப்போது வாக்குச்சாவடியிலிருந்து அதிகாரிகளிடம் அவரது ஆதார் ஆவணத்தை காண்பித்து சென்றார். அந்த ஆவணத்தை சரிபார்த்த போது அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரமூர்த்தி தான் இப்போது தான் வாக்களிக்க வந்துள்ளேன் எனது வாக்கை யார் மாற்றிப்போட்டது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் பரவியதால் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து தேர்தல் அதிகாரி சுரேஷ் கூறும்போது ஒரே பெயரில் இருவரும் உள்ளனர். மேலும் இருவரும் வாக்களிக்க ஆதார் ஆவணத்தை கொண்டு வந்தனர். இருப்பினும் பூத் ஏஜெண்டுகளிடம் முறையாக பாகம் எண், பெயர் உள்ளிட்டவைகள் சரிபார்த்து முதலில் வந்த சுந்தர மூர்த்தி வாக்களிக்க அனுமதித்தோம். பின்னர் அதே பெயரில் மற்றொரு சுந்தரமூர்த்தி வந்துள்ளதால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாலை 5 மணி அளவில்முறையில் அவர் வாக்களிக்கலாம் என தெரிவித்தனர். பின்னர் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு ஓட்டு கழிக்கப்படும் என்றார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story