பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களித்த கொரோனா நோயாளிகள்


பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களித்த கொரோனா நோயாளிகள்
x
தினத்தந்தி 19 Feb 2022 10:41 PM IST (Updated: 19 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களித்த கொரோனா நோயாளிகள்

நாமக்கல்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 679 வாக்குச்சாவடிகளிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் பாதுகாப்பு கவசஉடை அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் மாலையில் அந்த உடையை அணிந்து பணியாற்றினர். இதேபோல் வாக்களிக்க வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கவசஉடை அளிக்கப்பட்டது.
நாமக்கல் நகரில் தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று மாலையில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் நாமகிரிப்பேட்டை பேரூராட்சியிலும் நேற்று மாலை கொரோனா நோயாளி ஒருவர் பாதுகாப்பு கவசஉடை அணிந்து ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story