பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தி விட்டு வாக்களித்த ருசிகரம்
பொமல்லாபுரம் பேரூராட்சியில் சாலையோரம் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று காலை தர்மபுரியில் இருந்து பொம்மிடி வழியாக சேலம் செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி சென்றார். பொ.மல்லாபுரம் பகுதியில் சென்றபோது சாலையோரத்தில் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பேரூராட்சி தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்து விடுவதாக பயணிகளிடம் தெரிவித்த அவர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். சற்று நேரத்தில் மீண்டும் பஸ் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தார். அங்கிருந்து பயணிகளுடன் அந்த பஸ் சேலத்திற்கு புறப்பட்டது. தனியார் பஸ்சை இயக்கும் பணியில் இருந்தபோது பயணிகளிடம் அனுமதி பெற்று டிரைவர் ஸ்ரீதர் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story