தஞ்சையில், புத்தக கண்காட்சி
தஞ்சையில், புத்தக கண்காட்சி அடுத்த மாதம்(மார்ச்) 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.
பிள்ளையார்பட்டி:
தஞ்சையில், புத்தக கண்காட்சி அடுத்த மாதம்(மார்ச்) 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சி
தஞ்சை தெற்குவீதி அருகே மானோஜியப்பா வீதியில் உள்ள ராமசாமி பத்தர் கல்யாண மண்டபத்தில் புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த புத்தக கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(மார்ச்) 6-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
10 சதவீதம் தள்ளுபடி
இந்த புத்தக விற்பனை கண்காட்சியில் நாவல், கவிதைகள், இலக்கியம், மருத்துவம், சுயமுன்னேற்றம், ஆன்மிகம், பொது கட்டுரைகள், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, கதை, சமையல், வரலாறு, பொதுஅறிவு, போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் சாண்டில்யன், கோவி மணிசேகரன், கி.ராஜநாராயணன், சுஜாதா, பாலகுமாரன், கண்ணதாசன், வைரமுத்து, வாலி, ரமணிசந்திரன் மற்றும் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களும், பல்வேறு பதிப்பகத்தின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு விற்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை உண்டு. அனுமதி இலவசம்.
அடுத்த மாதம்(மார்ச்) 6-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும் என்று புத்தக கண்காட்சி பொறுப்பாளர் விஜயரங்கன் கூறினார்.
Related Tags :
Next Story