ஓசூரில் கள்ள ஓட்டுபோட்டதாக சிக்கிய பெண்


ஓசூரில் கள்ள ஓட்டுபோட்டதாக சிக்கிய பெண்
x
தினத்தந்தி 19 Feb 2022 10:46 PM IST (Updated: 19 Feb 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் கள்ள ஓட்டுபோட்டதாக பெண் ஒருவர் சிக்கினார்.

ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி தேர்தலையொட்டி, சீதாராம் மேடு அருகேயுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று மாலை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது கள்ள ஓட்டுபோட்டதாக பெண் ஒருவரை, 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர் மாணிக்கவாசகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்தனர். 
விசாரணையில் அந்த பெண், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த வேலு என்பவரது மனைவி புஷ்பா (வயது 48) என்பதும், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி செய்து வருவதும் தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையை போலியாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. அந்த பெண்ணின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வலியுறுத்தினார்கள்.

Next Story