வாக்குச்சாவடியில் இருதரப்பினர் மோதல்


வாக்குச்சாவடியில் இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 19 Feb 2022 11:20 PM IST (Updated: 19 Feb 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடியில் இருதரப்பினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை, 
கீழக்கரையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் இளம் வாக்காளர்கள் மற்றும் 90 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள், ஊனமுற்றவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். கீழக்கரை நகராட்சி பகுதியில் 21 வார்டுகளில் 110 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு 16,312 ஆண் வாக்காளர்களும் 16,618 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 1 வாக்காளர் உள்ளனர். கீழக்கரை நகராட்சியில் 14 இடத்தில் 43 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டன. காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பகல் 1 மணி வரை 33 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. குறிப்பாக பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதற்கிடையில் 3-வது வார்டு, 14-வது வார்டு வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் உள்ளே சென்றதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில்  பதற்றம் ஏற்பட்டது. உடனே கீழக்கரை  போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமை யிலான போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story