தவறி விழுந்த மான் பலி


தவறி விழுந்த மான் பலி
x

கூடலூர் முல்லைப்பெரியாற்றில் தவறி விழுந்த மான் பரிதாபமாக இறந்தது.

கூடலூர்:

கூடலூர் முல்லைப்பெரியாறு குருவனூற்று பாலம் அருகே சிறுபுனல் நீர்மின் நிலையம் உள்ளது. அங்குள்ள தண்ணீரில் மிளா மான் குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரக வனவர் சிவலிங்கம் மற்றும் வனத்துறையினர் அங்கு வந்தனர். 

பின்னர் அவர்கள், இறந்து கிடந்த மானின் உடலை கைப்பற்றினர். கம்பம் அரசு கால்நடை மருத்துவர் செல்வம் தலைமையிலான குழுவினர், மானின் உடலை பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்தது 6 மாத மிளா மான் குட்டி ஆகும். அது தண்ணீருக்குள் தவறி விழுந்து இறந்துள்ளது என்றனர். 

Next Story