ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
வாய்மேட்டில் நூலகத்தில் இயங்கி வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேட்டில் நூலகத்தில் இயங்கி வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நூலகம்
நாகை மாவட்டம் வாய்மேட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்ததால் அருகில் உள்ள நூலகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக நூலக கட்டிடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நூலகத்தில் புத்தகம் வாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
நூலகத்தில் உள்ள புத்தகம் அதே கட்டிடத்தின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு வந்து தங்களது படிப்பறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு தடையாக உள்ளது. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படும் நூலக கட்டிடம் மிக சிறிய அளவில் உள்ளதால் தினந்தோறும் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடத்தில் இயங்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story