கரும்பு தோட்டத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீ


கரும்பு தோட்டத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீ
x
தினத்தந்தி 19 Feb 2022 11:34 PM IST (Updated: 19 Feb 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

உப்புக்கோட்டை அருகே கரும்பு தோட்டத்தில் கொழுந்து விட்டு தீ எரிந்தது.

உப்புக்கோட்டை:

உப்புக்கோட்டையை அடுத்த சடையால்பட்டி சுடுகாடு அருகே, 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்தநிலையில் தோட்டத்தின் வேலியில் இருந்த செடி-கொடிகளை வெட்டி தீ வைத்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து வேலியில் வைக்கப்பட்ட தீ காற்றின் மூலம் பரவி, நேற்று மதியம் சடையால்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோரது கரும்பு தோட்டத்தில் பற்றியது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.  

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டதால், கரும்பு தோட்டம் அருகே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையம் தீப்பற்றாமல் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story