ஏரல் அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன


ஏரல் அருகே 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 19 Feb 2022 11:50 PM IST (Updated: 19 Feb 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே ஊருணியில் கிடந்த 2 மலைப்பாம்புகளை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

ஏரல்:
ஏரல் அருகே மங்கலகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள ஒரு சிறிய வாய்க்காலில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதை பார்த்த அப்பகுதியினர் ஸ்ரீவைகுண்டம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வன அதிகாரி பழனி, வன பாதுகாவலர்கள் கோபிநாத், காந்தி, சங்கரலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊர் மக்கள் உதவியுடன் மலைப்பாம்பை தேடினர். 

அப்போது மங்கலகுறிச்சி அருகே உள்ள ஊருணி தண்ணீரில் மலைப்பாம்பு இருக்கலாம் என கருதி மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். அப்போது அங்கே 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் இருந்ததை பார்த்தனர். உடனே அவற்றை வனத்துறையினர் பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 






Next Story