குமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு:வாக்காளர்கள் எண்ணிக்கை -10,38,061 வாக்களித்தவர்கள் எண்ணிக்கை-6,84,559
குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10,38,061 ஆகும். இவர்களில் 6,84,559 பேர் வாக்களித்தனர். இதன் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 65.95 ஆகும்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10,38,061 ஆகும். இவர்களில் 6,84,559 பேர் வாக்களித்தனர். இதன் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 65.95 ஆகும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. மதியத்துக்கு பிறகு விறுவிறுப்பு குறைந்தது. மாலையில் மீண்டும் பல வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாகவும், சில வாக்குச்சாவடிகளில் மந்தமாகவும் பதிவானது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு வாரியாக பதிவான வாக்குகள் மற்றும் சதவீதம் விவரம் வருமாறு:-
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 1,21,846 பேரும், பெண் வாக்காளர்கள் 1,25,541 பேரும், திருநங்கைகள் 12 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். 52 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 356 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதற்காக 233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நேற்று காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் 74,593 பேரும், பெண் வாக்காளர்கள் 76,177 பேரும் என மொத்தம் 1,50,770 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே மாநகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 60.94 ஆகும்.
கொல்லங்கோடு-குளச்சல்
கொல்லங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 25,603 ஆண் வாக்காளர்களும், 26,059 பெண் வாக்காளர்களும், 4 திருநங்கைகளும் என மொத்தம் 51 ஆயிரத்து 666 வாக்காளர்கள் உள்ளனர். 33 வார்டுகளுக்கு 165 போ் போட்டியிட்டனர். இதற்காக 63 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு ஆண் வாக்காளர்கள் 14, 595 பேரும், பெண் வாக்காளர்கள் 17,050 பேரும் என மொத்தம் 31, 645 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 61.34 ஆகும்.
குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. 11,605 ஆண் வாக்காளர்களும், 11,615 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கைகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 223 வாக்காளர்கள் உள்ளனர். 24 வார்டுகளுக்கு 78 பேர் போட்டியிட்டனர். 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 6,570 பேரும், பெண் வாக்காளர்கள் 7,929 பேரும், என மொத்தம் 14, 599 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 62.86 ஆகும்.
குழித்துறை-பத்மநாபபுரம்
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 8,767 ஆண் வாக்காளர்களும், 9,608 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கையும் என மொத்தம் 18 ஆயிரத்து 376 வாக்காளர்கள் உள்ளனர். 21 வார்டுகளுக்கு 83 பேர் போட்டியிட்டனர். 22 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 5,641 பேரும், பெண் வாக்காளர்கள் 6, 163பேரும் என மொத்தம் 11, 804வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 64.24 ஆகும்.
பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 8,492 ஆண் வாக்காளர்களும், 8,759 பெண் வாக்காளர்களும், 2 திருநங்கைகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 253 வாக்காளர்கள் உள்ளனர். 21 வார்டுகளுக்கு 111 பேர் போட்டியிட்டனர். 21 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஆண் வாக்காளர்கள் 5,684 பேரும், பெண் வாக்காளர்கள் 6,048 பேரும் என மொத்தம் 11, 732 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த நகராட்சியின் வாக்குப்பதிவு சதவீதம் 68 ஆகும்.
பேரூராட்சிகள்
51 பேரூராட்சிகளில் 828 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் ஆண் வாக்காளர்கள் 3,38,746 பேரும், பெண் வாக்காளர்கள் 3,41,425 பேரும், திருநங்கைகள் 46 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரத்து 217 வாக்காளர்கள் உள்ளனர்.
828 வார்டுகளில் 4 வார்டுகளின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனால் 824 வார்டுகளுக்கு 3,573 பேர் போட்டியிட்டனர். இவற்றில் ஆண் வாக்காளர்கள் 2,22, 346 பேரும், பெண் வாக்காளர்கள் 2,41,658 பேரும், திருநங்கைகள் 5 பேரும் என மொத்தம் 4,64,009 வாக்காளர்கள் வாக்களித்தனர். எனவே இந்த பேரூராட்சிகளின் வாக்குப்பதிவு சதவீதம் 68.21 ஆகும்.
சதவீதம் எவ்வளவு?
இவ்வாறு மொத்தம் குமரி மாவட்டத்தில் உள்ள 56 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 975 கவுன்சிலர் பதவிகளுக்கு 4,366 பேர் போட்டியிட்டனர்.
இந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஆண் வாக்காளர்கள் 5,15,059 பேரும், பெண் வாக்காளர்கள் 5,22,934 பேரும், திருநங்கைகள் 68 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 61 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3,29,529 பேரும், பெண் வாக்காளர்கள் 3,55,025 பேரும், திருநங்கைகள் 5 பேரும் என மொத்தம் 6,84,559 பேரும் வாக்களித்தனர். எனவே குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 65.95 ஆகும்.
சீல் வைப்பு
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு, மண்டல அதிகாரிகள் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் உள்ள 18 பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்த பாதுகாப்பு அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். வருகிற 22-ந் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்.
Related Tags :
Next Story