அ.தி.மு.க.-காங்கிரஸ் மோதல்; மண்டை உடைப்பு
அ.தி.மு.க.-காங்கிரஸ் மோதல்; மண்டை உடைப்பு
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கான 11-வது வார்டு தேர்தலுக்காக ராம்நகர் ஜோசப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வார்டில் காங்கிரஸ் சார்பில் பவுல் ஆரோக்கியசாமியும், அ.தி.மு.க. சார்பில் சண்முகநாதனும் போட்டியிடுகின்றனர்.
நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்தின் அருகே காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் பூத் சிலிப் வினியோகம் செய்தனர். அப்போது அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன், பாலாஜி உள்பட சிலர் காங்கிரஸ் வேட்பாளர் பவுல்ஆரோக்கியசாமியின் மகன்கள் பிரகாஷ், ரெக்ஸ் ஆன்டோ மற்றும் ஜோசப் மகன் ேஜசுராஜன் ஆகியோரை பாட்டில் மற்றும் டியூப் லைட் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஜேசுராஜனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் ரெக்ஸ் ஆன்டோ, பிரகாஷ் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story