“மக்கள் தி.மு.க.வின் பக்கம் தான்”-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி


“மக்கள் தி.மு.க.வின் பக்கம் தான்”-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2022 1:11 AM IST (Updated: 20 Feb 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தி.மு.க.வின் பக்கம் தான் உள்ளனர் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

சிவகங்கை
மக்கள் தி.மு.க.வின் பக்கம் தான் உள்ளனர் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
வெற்றி அடையும்
தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி அடையும். மக்கள் தி.மு.க.வின் பக்கம்தான் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. தமிழகத்தில் சட்டப்படியே தேர்தல் நடந்து வருகிறது. எந்த குற்றச்சாட்டிற்கும் இடமில்லாமல் தேர்தல் நடைபெற்றுள்ளது.
அ.தி.மு.க.வினர் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்ளவே பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பெண்களுக்கான உதவி தொகை மட்டும் நிலுவையில் இருந்தது. அதனையும் தருவதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சொல்லாமலும் நிறைய திட்டங்களையும் செய்து வருகிறார். செய்ய வேண்டியது அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. 
சீரமைக்கப்பட்டு வருகிறது
போக்குவரத்துத்துறை குறித்து 24-ந் தேதிக்கு பிறகு பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சருடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். போக்குவரத்து துறையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து சீரமைக்கப்பட்டு வருகிறது. 
இன்னும் சீரமைக்க வேண்டிய பொறுப்பு இந்த ஆட்சிக்கு உள்ளது. பழைய பஸ்களை அ.தி.மு.க. அரசு வழங்கி சென்றுள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் புதிய பஸ்கள் வாங்கி சிறப்பாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story