வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைப்பு
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
இதில் 215 பதவிகளுக்கு தேர்தலில் 848 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலுக்காக 282 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 37 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
சீல் வைப்பு
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்புடன் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 30 வார்டுகளுக்கு 57 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான திருவாரூர் ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story