துறையூரில் தெப்பக்குளத்தில் மூழ்கியவர் பலி

துறையூரில் தெப்பக் குளத்தில் மூழ்கியவர் பலியானார்.
தெப்பக்குளத்தில் மூழ்கினார்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதி செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 44). இவர் நண்பர் ஒருவருடன் துறையூருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் துறையூரில் உள்ள காசி விசுவநாதர் கோவில் மூங்கில் தெப்பக்குளத்தில் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். மூழ்கிய அவர் வெகுநேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்துஅக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
பிணமாக மீட்பு
அதன்பேரில் நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி சாமிநாதனை பிணமாக மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story