அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு


அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு
x
தினத்தந்தி 20 Feb 2022 2:29 AM IST (Updated: 20 Feb 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிளஸ்-1 மாணவி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கம், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய ஒரே மகள் பொன்னரசி (வயது 17).
இவர் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 கணினி பாடப்பிரிவில் படித்து வந்தார். இவர் கடந்த 3-ந்தேதி மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளி ஆய்வக கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு
இதில் பலத்த காயமடைந்த பொன்னரசிக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் பொன்னரசி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது ஒரே மகளையும் இழந்த பெற்றோர், மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

Next Story