கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2022 2:36 AM IST (Updated: 20 Feb 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மைசூரு: மைசூருவில் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவன் தற்கொலை 

மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவ். இவரது மகன் அக்‌ஷய் குமார் (வயது 18). இவர் மைசூரு சரஸ்வதிபுரத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அக்‌ஷய் குமார், கல்லூரியில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்தார். 

கடந்த 15-ந் தேதி சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மறுநாள் அக்‌ஷய் குமார் திரும்பி வந்தார். இந்த நிலையில், அவர் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதி அறையில் அக்‌ஷய்குமார் தூங்கில் தொங்குவதை பார்த்து சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விடுதி வார்டனுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விடுதி வார்டன் உடனடியாக சரஸ்வதிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார், விடுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அக்‌ஷய் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதற்கிடையே அக்‌ஷய்குமாரின் தந்தை, தனது மகன் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் சரஸ்வதி புரம் போலீசில் புகார் கொடுத்தார். 
இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story