வாலிபர் கொலையில் துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைப்பு
கன்னியாகுமரியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பதை துப்பு துலக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பதை துப்பு துலக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வாலிபர் படுகொலை
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் நேற்று முன்தினம் காலையில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டவரின் உடலை பார்வையிட்டனர்.
கொலை செய்யப்பட்டவர் யார்?
தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மதுபோதை தகராறில் அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தேர்தல் தகராறில் இந்த கொலை நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் இதுவரை ெதரியவில்லை. இறந்தவர் யார் என்ற விவரம் தெரிந்தால்தான் கொலைக்கான பின்னணி தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
2 தனிப்படைகள் அமைப்பு
இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலும், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலும் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் படுகொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதற்காக குமரி மற்றும் பக்கத்து மாவட்டங்களில் மாயமானவர்கள் விவரங்களை சேகரித்து பட்டியல் தயாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story