அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 20 Feb 2022 5:50 PM IST (Updated: 20 Feb 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. 

இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 

இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

மேலும் கடந்த 15-ந் தேதி இரவு முதல் 16-ந் தேதி இரவு வரை பவுர்ணமி இருந்தது. பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். 

இதனால் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக வெளியே வந்த பக்தர்கள் கூறினர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.

Next Story