கள்ளக்குறிச்சியில் அ தி மு க வேட்பாளர் மீது வழக்கு


கள்ளக்குறிச்சியில்  அ தி மு க வேட்பாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Feb 2022 9:39 PM IST (Updated: 20 Feb 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அ தி மு க வேட்பாளர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சி 6-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் ஜெய்முருகன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தோளில் கட்சி துண்டை போட்டுக்கொண்டு வாக்களிக்க சென்றதாக கிராம நிர்வாக அலுவலர் சலீம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெய்முருகன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story