நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி தற்கொலை
நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரீத்தி (வயது 19). இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி கடந்த 10-ந்தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story